அமைதியைக் கூட்டாக உருவாக்கி எதிர்காலத்தைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது என்ற தலைப்பிலான 11ஆவது பெய்ஜிங் சியாங்சன் மன்றம் செப்டம்பர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மன்றத்துக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், உலகம் நூறு ஆண்டுகளில் காணாத பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், உலகப் பாதுகாப்பு முன்மொழிவைச் சீனா நடைமுறைப்படுத்தி, தொடர்ச்சி, அமைதி, பொதுவான பாதுகாப்பு ஆகியவற்றை வாய்ந்த உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைப்பதற்காகச் சளையாமல் பாடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த மன்றம், உலகப் பாதுகாப்பு அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை முன்னேற்றுவதற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.