தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Estimated read time 1 min read

தமிழ்நாடு தினத்தையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், கடின உழைப்பு மிக்கவர்களாய் விளங்கும் தமிழக மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

உற்பத்தித் துறை முதல் வாகனங்கள், ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் வரை தமிழகம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது என கூறியுள்ளார். மேலும், தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது தனது தலைமையிலான அதிமுக அரசுதான் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மை, சங்க இலக்கியங்களின் செழுமை, தமிழர் பண்பாட்டின் பெருமை ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் மாநிலம் தமிழ்நாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு மேலும் உயரங்களைத் தொட, உலக அரங்கில் தனித்துவத்துடன் திகழ, தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author