இனி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் குறையும்! புதிய செயலியை அறிமுகம் செய்த ஓனர்கள்!

Estimated read time 1 min read

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் சுனில்குமார் ஆகியோர் கூறியதாவது: மத்திய அரசின் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் வகையில், ‘Roamie’ என்ற முன்பதிவு செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் ஆதரவுடன், ‘Roamie Mobility’ நிறுவனம், இந்த செயலியை அறிமுகப்படுத்துகிறது. நகரங்களுக்கு இடையிலான பஸ் முன்பதிவு சேவையை மேம்படுத்துவதுடன், பஸ் இயக்குவோர்களின் கமிஷன் செலவை குறைத்து, பயணியருக்கு நியாயமான கட்டணத்தில் பயணச் சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்படும், www.roamie.co.inஎன்ற புதிய இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, பல்வேறு தனியார் நிறுவனங்களின் பஸ்களின் சேவைகளை, ஒரே தளத்தில் கண்டறிந்து, பயணியர் முன்பதிவு செய்ய முடியும்.

பஸ்களின் வழித்தடங்கள், பயண நேரம், கட்டணங்கள் மற்றும் இருக்கை வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்து, பயணியர் தங்களுக்கு ஏற்ற சேவையைத் தேர்வு செய்யலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் பஸ் நிறுவனங்களின், 800க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் இணைந்துள்ளனர்.

இந்த செயலியை, ‘கூகுள் பிளே’ மற்றும் ‘ஆப்பிள் ஆப் ஸ்டோரில்’ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பஸ்கள் கண்காணிப்பு வசதி, முன்பதிவு செய்யப்பட்ட பஸ்சின் இருப்பிடத்தை பயண நேரத்தில் அறிந்து கொள்ளலாம். அதிக கமிஷன் வசூலிக்கும் தளங்களை தவிர்த்து, பயணியர் நியாயமான கட்டணங்களில் பயணிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author