“ரூ.5 லட்சம் கிடையாது… இனி ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை!” – தமிழக அரசு வெளியிட்ட மெகா அறிவிப்பு!

Estimated read time 0 min read

தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். மேலும், எட்டு வகையான, உயர்தர சிகிச்சைகளுக்கு, 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். ‘யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம்’ வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, தமிழக அரசு ஆண்டுக்கு, 1,300 கோடி ரூபாய் வழங்குகிறது.

இந்நிலையில், அரசின் காப்பீடு தொகையை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக, முதல்வர் விஜய் அறிவித்தார். வரும், 2027 முதல், இது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இத்திட்ட பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு, 1.20 லட்சம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகளின் கீழ், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, புதிய காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author