எகிறிய தங்கம் விலை! 1 சவரன் எவ்வளவுக்கு விற்பனையாகுது தெரியுமா?

Estimated read time 1 min read

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. உலகளாவிய தங்க கணக்கீட்டின்படி, ஒரு அவுன்ஸ் 3,700 அமெரிக்க டாலர் முதல் 3,250 அமெரிக்க டாலர் குறையும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்திருக்கிறது. இந்த கணிப்பின்படி, உலக சந்தையில் தங்கம் விலை 3,250 டாலர் வரை சரிந்தால், இந்தியாவில் 22 காரட் ஒரு சவரன், அதாவது 8 கிராம் விலையானது ரூ. 72 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில், அமெரிக்க – ஈரான் போரின் தாக்கத்தால் இதுவரை 15% வரை சரிந்திருக்கிறது. எனினும், இடையே கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஒரு சவரன் விலை ரூ. 1.20 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில் அடுத்த ஒன்றரை மாதங்களில் மடமடவென சரிந்து, ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.

மாதத்தின் முதல் நாளான நேற்று (நவம்பர் 1) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.12,730-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையானது.

இன்று (நவம்பர் 2) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து, ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது

Please follow and like us:

You May Also Like

More From Author