கனமழை இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

Estimated read time 1 min read

வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் முரசு புயல் சென்னைக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை தீவிர புயலாக வலுவடைந்து தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை மற்றும் முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02.11.2026 – திங்கட்கிழமை) விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author