3,597 சீருடைப் பணியாளர்கள் தேர்வுப் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு!

Estimated read time 1 min read

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். காவல், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய 3 துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 3,665 இரண்டாம் நிலைக் காவலர்கள். இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக. 21.08.2025 அன்று அறிவிக்கை எண்.02/2025-ஐ வெளியிட்டு பொதுத்தேர்வு 2025-ல் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 3.665 காலிப்பணியிடங்களில். 68 விண்ணப்பதாரர்கள் (மெச்சத்தகுந்த விளையாட்டு வீரர்கள்) ஏற்கனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3.597 தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் இன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் சமர்ப்பித்துள்ள தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள். அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதற்கு முன்னர். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன். சான்றிதழ்களின் உண்மைத்தன்மை மற்றும் அவர்களின் முன்வரலாறு (Antecedents) ஆகியவை சரிபார்க்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author