“மூக்குத்தி அம்மன்-2 வெற்றி பெறணும்” காளிகாம்பாள் கோயிலில் நயன்தாரா நடத்திய சிறப்பு பூஜை…. வைரலாகும் வீடியோ….!! 

Estimated read time 1 min read

சென்னை காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா திடீரெனச் சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தச் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.

கோயிலுக்கு வந்த நயன்தாரா, ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் வருவது போன்ற அதே தெய்வீகத் தோற்றத்திலேயே கலந்துகொண்டார். இதைப் பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் “நேரில் அம்மனே வந்து பூஜையில் பங்கேற்றது போல் உள்ளது” என்று சோசியல் மீடியாவில் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நயன்தாராவின் இந்தத் திடீர் கோயில் விஜயமும் சிறப்பு பூஜையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author