புயல் தாக்கம் காரணமாக ஆந்திரா செல்லும் விமானங்கள் 2வது நாளாக ரத்து..!

Estimated read time 1 min read

‘முரசு’ புயல், ஆந்திராவின் நெல்லூர் – நரசாபூர் இடையே கரையை கடந்தது. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

மோசமான வானிலை நிலவி வருகிறது. புயல் தாக்கம் காரணமாக ஆந்திரா செல்லும் விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா, ராஜ முந்திரி விமான நிலையங்களுக்கு செல்லும் 2 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

நேற்றைய தினம் சென்னை-ஆந்திரா இடையே 11 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author