தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ‘ஜன நாயகன்’ படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 3-ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
புத்தாண்டை முன்னிட்டு, இது சம்மந்தமாக விஜய் பகிர்ந்துள்ள புதிய போஸ்டரில், கருப்பு நிற சட்டையில் கையில் துப்பாக்கியுடன் மிகவும் ஸ்டைலாகக் காட்சியளிக்கிறார்.
இந்தப் போஸ்டரில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலின் பிம்பமும் இடம்பெற்றுள்ளது.
விஜய்யின் திரைப்பயணத்தில் இது 69-வது மற்றும் கடைசிப் படமாகும்.
இந்தப் படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜய்யின் ஜன நாயகன் ட்ரைலர் நாளை மாலை வெளியாகிறது; தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்
