சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

Estimated read time 1 min read

சோமாலியா அருகே ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘அசினி’ மீன்பிடிக் கப்பல் 48 மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சோமாலியாவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் ‘அசினி’ என்ற மீன்பிடிக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போர்க்கப்பல் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானம் மூலம் கப்பலின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் மூலம் கடற்படை கமாண்டோக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த துல்லியமான நடவடிக்கையின் மூலம் கப்பல் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலும் முறியடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடி கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author