தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி!

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய பொது நல வழக்கில், உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும், வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது. மேலும், பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் வரையறுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே* ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை: 6.00 AM – 7.00 AM (1 மணி நேரம்), இரவு: 7.00 PM – 8.00 PM (1 மணி நேரம்) ஆக மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author