450 டன் வெங்காயத்தை காணவில்லை – எடப்பாடி பழனிசாமி

Estimated read time 1 min read

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் கொள்முதல் செய்ததை இறக்காமல் வீணடிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறைந்த விலைக்கு ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை என வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு. கொருக்குப்பேட்டை கிடங்கில் 3 நாட்களாக வெங்காயம் லாரிகளில் இருந்து இறக்காமல் வீணாவதாக செய்திகள் வருகிறது. வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் கொள்முதல் செய்ததை இறக்காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. NAFED மூலம் கொள்முதல் செய்த 450 டன் வெங்காயம் தரமில்லை என்றுகூறி பெறவில்லை என்கிறது தமிழக அரசு. வெங்காயம் தங்களுக்கு வரவில்லை NAFED என்கிறது. அதாவது 450 டன் வெங்காயத்தை காணவில்லை. ” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author