120 கி.மீ. வேகத்தில் காற்று! ஆந்திராவை புரட்டி போடும் முரசு புயல்!

Estimated read time 1 min read

ஆந்திரா : வங்கக்கடலில் உருவான ‘முரசு’ தீவிரப் புயல் (Severe Cyclonic Storm) ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோல் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்த போதிலும், அதன் கோரத் தாண்டவம் இன்னும் ஓயவில்லை. தற்போது பாபட்லா அருகே நிலைகொண்டுள்ள இந்தப் புயல் அப்பகுதியில் தொடர் மழையையும், பலத்த காற்றையும் ஏற்படுத்தி பெரும் சேதத்தைச் சந்தித்து வருகிறது.

புயலின் தாக்கம் காரணமாக ஆந்திராவின் பிரகாசம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சூறாவளி காற்று காரணமாக ஏராளமான ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணிகளிலும், சாய்ந்த மரங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளிலும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புயல் கரையை கடந்தாலும் இதன் எச்சரிக்கை இன்னும் விலகவில்லை. அடுத்த 12 மணி நேரத்திற்கு அப்பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் எனத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author