தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15 சதவீதம் வளர்ந்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் உண்மையான GST வருவாய் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை 15% வளர்ச்சி கண்டுள்ளதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மட்டுமே 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு மொத்த வசூல் (GROSS COLLECTION) புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு எடைபோடுவது சரியான அணுகுமுறை அல்ல எனக் கூறியுள்ள அவர், அக்டோபர் மாதத்தில் மட்டும் 8 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உன்மையில் கடந்த 5 ஆண்டில் DOOMSDAY (நெருக்கடி) நிலையில் இருந்த தமிழ்நாட்டை, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பவர்தான் முதல்வர் விஜய் என்றும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
