தமிழ்நாடு முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் குப்பை அள்ளும் பணி!

Estimated read time 1 min read

இதுவரை குப்பை அள்ளும் பணியை நகராட்சியே நேரடியாக செய்தது. ஆனால் இனி “திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கான சேவை செயல்பாடுகள் மூலமாக” தனியார் ஏஜென்சி மூலம் தான் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் திடக்கழிவுகளை சேகரித்து, செயலாக்க மையங்களுக்கு, குப்பை கொட்டும் மையங்களுக்கு கொண்டு செல்வதற்கும், நுண் உரமாக்கல் மையங்களை (MCCs) இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் சேவை வழங்குநரை தேர்ந்தெடுத்தல் பணி 18 மாதங்கள் டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் சுமார் 50,000 தூய்மை பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. உதாரணமாக சென்னை மாநகராட்சியில் மட்டும் 6,000 பேர் தேவை, இருப்பது 3,500 பேர் தான்! இருக்கும் பணியாளர்களில் பலர் 50 வயதை தாண்டியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள். இதனால் 100% வீடு தோறும் குப்பை சேகரிப்பு நடக்கவில்லை. பல தெருக்களில் குப்பை தேங்கி கிடக்கிறது. பல கோடி செலவில் கட்டப்பட்ட நுண் உரமாக்கல் மையங்கள் (MCCs)முறையாக இயங்கவில்லை. குப்பை பிரிக்கப்படாமல் அப்படியே கொட்டப்படுகிறது. மாநகராட்சியே வாகனம் வைத்து பராமரிப்பது பெரும் நஷ்டம்! இதனால் இனி “திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கான சேவை செயல்பாடுகள் மூலமாக” தனியார் ஏஜென்சி மூலம் தான் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, ஆள் பற்றாக்குறை மற்றும் சுத்தமின்மையை சமாளிக்க, குப்பை அள்ளும் பணியை முழுவதுமாக தனியார் மயமாக்கும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆகவே இதுவரை ரூ.500, ரூ.600 தினக்கூலி கொடுத்த நிலை மாறி, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூலி அல்லது தொழிலாளர் துறையின் குறைந்தபட்ச ஊதியம், இதில் எது அதிகமோ அதை கொடுக்க வேண்டும்! அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.700 – ரூ.850 வரை கிடைக்கும். தனியார் நிறுவனம் கண்டிப்பாக ESI (மருத்துவ காப்பீடு), EPF (சேம நிதி) பிடித்து கட்ட வேண்டும். GPS பொருத்தப்பட்ட வாகனம், தினமும் குப்பை சேகரிப்பு, MCC-க்கள் முறையாக இயங்கும். இனி அரசு நேரடியாக தூய்மை பணியாளர்களை நியமிக்காது. எல்லாம் காண்ட்ராக்ட் தான்! நிரந்தர பணி பாதுகாப்பு இல்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author