பெய்ஜிங் நேரப்படி ஜுலை 12ஆம் நாள் காலை 9 மணிக்கு, திரவ ஆக்ஸிஜன் மீத்தேன் பொருளை உந்துவிசையாக கொண்டு, ஜு ச்சுயே-2 ஏவூர்தி, சீனாவின் ஜியுசுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்ட பறத்தல் கடமையை நிறைவேற்றியது. மனித குல வரலாற்றில் மீத்தேன் பொருள் ஏவூர்தி விண்னிலுள்ள சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது இதுவே முதன்முறையாகும். குறைந்த செலவிலான திரவ உந்துவிசை எரிபொருட்களைப் பயன்படுத்தும் ஏவூர்தி ஆய்வுத்துறையில் சீனா முக்கிய முன்னேற்றம் அடைந்துள்ளதை இது குறிக்கிறது.
திரவ மீத்தேன் பொருளுக்கு, தூய்மை, குறைந்த செலவு முதலிய மேம்பாடுகள் உள்ளன. இது விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு புதிய ரக எரியாற்றலாக மாறியுள்ளது.