கொடைக்கானலில் காட்டுத் தீ!: புகை மூட்டத்துடன் காட்சியளிக்கும் சாலைகள்!

கொடைக்கானலின் பல்வேறு கிராமங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் சாலைகள் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவுவதால் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வருகிறது.

இந்நிலையில் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் உள்ளதால், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author