தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைச் சூழ்நிலை நிலவுவதால், ஜூலை 5ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று (ஜூன் 29) மதியம் வரை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ. அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதுடன், வால்பாறை, சோலையார் (கோவை), பெரியாறு (தேனி) பகுதிகளில் தலா 5 செ.மீ. மற்றும் விருத்தாசலம் (கடலூர்) பகுதியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author