பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவும், 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 -வது நாள் கொண்டாட்டமே மாட்டுப் பொங்கல். மற்ற கால்நடைகளைக்காட்டிலும், மாட்டிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், அன்றைய காலத்தில் மனிதர்களின் முக்கியத் தொழிலே உழவுதான். அப்படிப்பட்ட உழுவுக்கு காளை மாடுகளை அதிகம் பயன்படுத்தினர்.
அப்படி, இரவு – பகலாக மனிதர்களுக்காக உழைத்து வரும் காளைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே மாட்டுப் பொங்கல்.
அன்றைய தினம், தங்களது வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது போல், பசு, காளைகள் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, பல வண்ண கோலங்கள் வரைந்து அழகுபடுத்துவா். குறிப்பாக, அதிகாலையிலே மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் சிவப்பு, நீலம், பச்சை எனப் பல வண்ணங்களில் அலங்காிப்பர்.
கொம்புகளின் உச்சியில் உலோகத்தாலான சிறுசிறு தொப்பிகளை அணிவித்தும், மலா் மாலைகள் சூட்டியும், அவற்றின் கழுத்தில் அழகிய சத்தம் வரும் மணிகளைக் கட்டி விடுவர். அதுமட்டுமல்ல, பொங்கல் முதல் நாளில் நெற்கதிா் படங்களையும், இரண்டாம் நாளில் சூாியன் மற்றும் கடவுள் படங்களையும், மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று பசு மற்றும் காளைகளின் படங்களை வரைந்தும் பெருமைப்படுத்துவர்.
வீட்டில் உள்ள பசு, காளைகளின் முன்நெற்றி மற்றும் கால்களைத் தொட்டும், ஆராத்தி எடுத்தும் வழிபடுவா். மாட்டுப் பொங்கல் அன்று அாிசி, பாசிப்பருப்பு, காய்ந்த பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த சுவையாக செய்த சா்க்கரைப் பொங்கல் சமைத்து, முதலில் காளைகளுக்கும் அடுத்து மற்ற கால்நடைகளுக்கு ஊட்டுவது வழக்கத்தில் உள்ளது.
இப்படி, உலகத்தில் மனித குலமே பெருமையுடன் விழா எடுக்கும் ஒரு கால்நடை எது என்றால் அது காளைகள் மட்டுமே.