தீபாவளி ஸ்பெஷல்: குடும்பத்துடன் பார்க்க 4 படங்கள்… எது பெஸ்ட்?

Estimated read time 1 min read

சென்னை : தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என கொண்டாட்டங்கள் களைகட்டும். அதோடு குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்றால் அந்த மகிழ்ச்சியே தனிதான். இந்த தீபாவளிக்கு வீட்டில் அனைவரும் சேர்ந்து எந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று யோசிக்கிறீர்களா?

இந்த முறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு Scane , Mookuthi Amman 2, Ramayana, Jailer 2 என நான்கு விதமான சினிமா அனுபவங்கள் காத்திருக்கின்றன. சூர்யாவின் அதிரடி போலீஸ் கதையா, நயன்தாராவின் அம்மன் அவதாரமா, ராமாயணத்தின் பிரம்மாண்ட உலகமா அல்லது ரஜினியின் மாஸ் ஆக்ஷனா என ரசிகர்களுக்கு தேர்வு செய்ய பல படங்கள் இருக்கின்றன. அப்படியென்றால், ஒவ்வொரு படமும் என்ன கதை சொல்கிறது? எந்தப் படம் நம்மை சிரிக்க வைக்கும்? எந்தப் படம் பிரம்மாண்டமான காட்சிகளால் வியக்க வைக்கும்? குடும்பத்தோடு பார்க்க எந்தப் படம் சிறந்த தேர்வாக இருக்கும்? என்பதை பார்க்கலாம்.

சீன்

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள Scène திரைப்படம், இந்த தீபாவளிக்கு கவனம் ஈர்க்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. ‘ஆவேஷம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சூர்யா இனபராஜ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முடிக்கப்படாமல் இருந்த ஒரு பழைய வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியதும் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. போலீஸ் விசாரணை, குற்றவாளிகள், அதிரடி சம்பவங்கள் என கதை நகர்கிறது.

படத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், சூர்யாவின் வழக்கமான நடிப்பிலிருந்து சற்று வித்தியாசமான கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக அவர் காட்டும் அணுகுமுறை, கதையில் வரும் நகைச்சுவை மற்றும் பரபரப்பான சம்பவங்கள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன. யாருக்கு பிடிக்கும்? போலீஸ் கதைகள், குற்ற விசாரணை, அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த படங்களை விரும்புபவர்களுக்கு சீன் ஒரு தேர்வாக இருக்கலாம்.

மூக்குத்தி அம்மன் 2

2020-ல் வெளியான முக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அம்மன் வேடத்தில் நயன்தாராவின் நடிப்பு, நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகள் எனப் பல விஷயங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. இப்போது அதன் இரண்டாம் பாகமாக Mookuthi Amman 2 வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். நயன்தாரா மீண்டும் முக்குத்தி அம்மனாக நடித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, குஷ்பு உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதையில், ஒரு அரசி தனது மகனை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தியாகம் செய்கிறார். அந்தக் குழந்தையை பாதுகாக்க முக்குத்தி அம்மன் மீண்டும் வருகிறார். அதே நேரத்தில் பூமியை அழிக்க நினைக்கும் சக்திகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நயன்தாரா இந்தப் படத்தில் அம்மன் வேடத்திலும், பயந்துபோகும் ஒரு பெண் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாதாரணமாக பயப்படும் போலீஸ் அதிகாரி, அம்மனின் சக்தி கிடைக்கும்போது எப்படி மாறுகிறார் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான அம்சம். பக்தி, நகைச்சுவை, கற்பனை மற்றும் அதிரடி என அனைத்தும் கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. யோகி பாபுவின் நகைச்சுவையும் படத்திற்கு கூடுதல் சுவை சேர்க்கிறது. யாருக்கு பிடிக்கும்? அம்மன் படங்கள், நகைச்சுவை மற்றும் கற்பனைக் கதைகளை விரும்புபவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். முதல் பாகத்தை ரசித்தவர்களுக்கு இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கும் ஆர்வமும் இருக்கும். இருப்பினும் U/A 16+ சான்றிதழ் இருப்பதால் குழந்தைகளுடன் செல்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியது அவசியம்.

ராமாயணம்

ராமாயணம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்த கதைதான். ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், ராவணன் என இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் பல தலைமுறைகளாக நம்முடன் இருக்கின்றன. இப்போது அந்தக் கதையை மிகப் பிரம்மாண்டமான காட்சிகளுடன் திரையில் கொண்டு வந்திருக்கிறது Ramayana: Part One. இந்தப் படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளனர். லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமர் பிறந்தது முதல் அவரது வாழ்க்கையில் நடைபெறும் முக்கியமான சம்பவங்கள், சீதையுடன் திருமணம், வனவாசம் மற்றும் ராவணனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் என ராமாயணத்தின் முதல் பகுதி கதையை இந்தப் படம் எடுத்துச் செல்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்திருப்பதும் படத்தின் முக்கியமான அம்சமாகும். யாருக்கு பிடிக்கும்? புராணக் கதைகள், வரலாற்று கதைகள் மற்றும் பிரம்மாண்டமான திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு Ramayana நல்ல அனுபவமாக இருக்கலாம். குழந்தைகளுக்கும் ராமாயணக் கதையை பெரிய திரையில் பார்க்கும் ஆர்வம் ஏற்படலாம். குடும்பமாக பார்க்கும்போது அனைவருக்கும் தெரிந்த கதையை புதிய காட்சிகளில் ரசிக்க முடியும்.

ஜெயிலர்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான Jailer திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம், அனிருத்தின் இசை, நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தன. இப்போது அதன் இரண்டாம் பாகமாக Jailer 2 வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் மீண்டும் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் ஸ்டைல், மாஸ் காட்சிகள், நெல்சனின் நகைச்சுவை மற்றும் அனிருத்தின் பின்னணி இசை என ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன.யாருக்கு பிடிக்கும்? ரஜினி ரசிகர்கள், ஆக்ஷன் படங்களை விரும்புபவர்கள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் விசில் அடித்து படம் பார்க்க விரும்புபவர்களுக்கு Jailer 2 ஒரு மாஸ் தேர்வாக இருக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author