பெரு நாட்டின் அரசுத் தலைவர் பொலுவார்டே அம்மையாரின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 13ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை, லிமா நகருக்குச் சென்று, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 31ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். அதே வேளையில், அந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரேசில் கூட்டாசிக் குடியரசு தலைவர் லூலாவின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 17ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை, ரியோ டி ஜெனிரோ நகருக்குச் சென்று, ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கான 19ஆவது உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார். தவிரவும், பிரேசிலில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.