ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர் 2’ டீசர் வெளியீடு  

Estimated read time 1 min read

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம் கடந்த 2025 டிசம்பரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது ஓடிடியிலும் முதலிடம் பிடித்துள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள டீசர், முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இருந்து தொடங்குகிறது.
லயாரியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘ஹம்சா அலி மசாரி’யாக ரன்வீர் சிங் செம ஸ்டைலாகவும், ஆக்ரோஷமாகவும் காட்சியளிக்கிறார்.
டீசரின் இறுதியில் ரன்வீர் பேசும், “இது புதிய இந்தியா, வீட்டுக்குள் புகுந்து அடிப்போம்”என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

You May Also Like

More From Author