ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் மாலை தியேன் ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, உரைநிகழ்த்தினார்.
உலகின் வளர்ச்சி முன்மொழிவு, பாதுகாப்பு முன்மொழிவு, நாகரிக முன்மொழிவை அடுத்து, உலகளாவிய ஆட்சி முறை குறித்து ஷிச்சின்பிங் முன்மொழிவை முன்வைத்தார். இந்த முன்மொழிவில் இறையாண்மை சமம், சர்வதேச சட்ட ஒழுங்கைப் பின்பற்றுவது, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்துவது, மனிதர்களே முதன்மை, நடைமுறை பயன்களில் முக்கியத்துவம் அளிப்பது முதலிய அம்சங்கள் இடம் பெற்றன.
அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட தற்காலப் போக்கு மாற வில்லை. ஆனால் பனிப்போர் சிந்தனை, மேலாதிக்கவாதம், பாதுகாப்புவாதம் ஆகியவற்றின் பாதிப்புகளுக்கிடையில், புதிய அச்சுறுத்தல்களும் சவால்களும் அதிகரித்து வருகின்றன. புதிய பதற்றமான கால கட்டத்தில் உலகம் நுழைந்துள்ளது. உலகளாவிய ஆட்சி முறை புதிய சாலை குறுக்கில் அமைந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு, மனித குலத்தின் சமூக வளர்ச்சி ஆகியவற்றின் கோணத்திலிருந்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய ஆட்சி முறை குறித்து முன்மொழிவை முன்வைத்தார். இது, உலகளாவிய ஆட்சி முறையின் சீர்திருத்தத்துக்குத் திசையைக் காட்டி, மேலும் நியாயமான ஆட்சி முறைக்கு ஆதாரம் கொடுக்கிறது.