சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான “ஆண்டுப் பணியறிக்கை ” வெளியீடு
சீனா சமீபத்தில் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 45 இலட்சத்து 47 ஆயிரம் கோடி யுவானுடன், 3.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஏற்றுமதித் தொகை 6.1 விழுக்காடாகவும் இறக்குமதித் தொகை 0.5 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளதோடு, சீனா உலகளாவிய சரக்கு வர்த்தகத் துறையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தணிவடைந்து, ஒருதரப்புவாதம் தலைதூக்கியுள்ள பின்னணியில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் கடினமானச் சூழ்நிலையுடன் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் அதிகரிப்புக்கு, சீனாவின் நிதானமான வெளிநாட்டு வர்த்தகம் தொடர்புடைய கொள்கைகளே முதன்மையான காரணமாகும். தவிரவும், மிகப் பெரிய அளவிலான சந்தை, முழுமையான தொழில் துறை கட்டமைப்புகளின் ஆதரவு ஆகியன மற்ற காரணங்களாகும். சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் சாதனைகள், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு வலிமையான அடிப்படையை வழங்கியுள்ளன. தவிரவும், இது, உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் மீட்சிக்கு நம்பிக்கையைக் கொண்டு வரும் என்று சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் சான்பைய்ச்சுவான் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில், 240க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் சீனா வர்த்தகம் செய்துள்ளது. 190க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனான ஏற்றுமதி இறக்குமதித் தொகை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சீனாவின் வர்த்தகம், உலகின் பல்வேறு பிரதேசங்களின் வளர்ச்சிகளுக்குத் துணை புரிந்துள்ளது.
தற்போது, சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள், மூன்றில் ஒரு பகுதிக்கு ஏற்றுமதி இறக்குமதி பங்குகளையும், 50 விழுக்காட்டு இயந்திர மின் உற்பத்தி பொருட்கள் மற்றும் உயர் தொழில் நுட்பத்தின் ஏற்றுமதி பங்குகளையும் வகிக்கின்றன. சீனாவின் உள்நாட்டையும் வெளிநாடுகளையும் ஒருங்கிணைக்கும் பாலமாக இந்நிறுவனங்கள் விளங்குகின்றன. மேலும், சீனாவின் வெளிநாட்டு வர்த்தக முன்னேற்றப் போக்கில் இவை மாபெரும் நன்மைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 4ஆவது முழு அமர்வும், பொருளாதாரப் பணி பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பணிக் கூட்டமும் நடைபெற்றன. அவற்றில், வர்த்தக வளர்ச்சி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதில் சரக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் சமமான வளர்ச்சியை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்ந்து சீராக இருப்பதற்கான நிலையான எதிர்பார்ப்பை வழங்குவதோடு, உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் உறுதியான நிலையை ஏற்படுத்தும்.
