சீன-ரஷிய அரசுத் தலைர்கள் கசான் நகரில் பேச்சுவார்த்தை
16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க அக்டோபர் 22ஆம் நாள் கசான் நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அதேநாள் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் இந்நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-ரஷிய தூதரக உறவு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவு ஆகும். கடந்த 75 ஆண்டுகளில், இரு நாட்டுறவு சவால்களை எதிர்கொண்ட நிலையில், அணிசேராமை, மோதலின்மை, வேறு மூன்றாவது தரப்பை குறிவைக்காது என்ற அண்டை பெரிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று பழகுவதற்கான சரியான வழியைக் சீனாவும் ரஷியாவும் கண்டறிந்துள்ளன. அதாவது, அண்டை நாடுகளிடையே நீடித்து வரும் நட்புறவு, விரிவான நெடுநோக்கு ஒருங்கிணைப்பு, பரஸ்பர நலன் மற்றும் வெற்றி தரும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாட்டைப் கடைப்பிடித்து, இரு தரப்புகளும் பல்வேறு துறைகளிலும் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை விரிவாக்கி வருகின்றன. இதுவே, இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு வலுவான உந்து சக்தியை செலுத்தி, சீன-ரஷிய மக்களுக்கு நன்மை அளித்து, சர்வதேச நியாயம் மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.
புதின் கூறுகையில், 75 ஆண்டுகளில், புதிய யுகத்தில் விரிவான நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளியாக இரு நாடுகள் வளர்ந்துள்ளன. உயர் நிலையிலான உறவு கொண்ட இரு நாடுகள், புதிய ரக பெரிய நாட்டுறவுக்கு முன்மாதிரியாக உருவாகியுள்ளன என்று தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில், பொது அக்கறை உள்ள சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.