“ஒரே நாளில் 13% சரிந்த பங்குச்சந்தை… என்விடியாவில் இனி ஒரு ரூபாய் கூட போட மாட்டேன்!” பகிரங்கமாகத் தூக்கி எறிந்த பிரபல பில்லியனர்… கொதித்தெழுந்த முன்னணி முதலீட்டாளர்…!!” 

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக டெக் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனப் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் குடும்ப விவகாரங்கள் காரணமாக அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் செய்தி வெளியானவுடன் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 13 சதவீதம் வரை சரிந்து பின்னர் சற்று மீண்டு வந்தன.

என்விடியா நிறுவனத்தில் சுமார் 1.3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள பிரபல பில்லியனர் லியோ கொகுஆன், ஜென்சன் ஹுவாங் இல்லாத என்விடியாவில் இனி ஒரு டாலர் கூட முதலீடு செய்யப் போவதில்லை எனத் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இருப்பினும், ஜென்சன் ஹுவாங் மீதுள்ள நம்பிக்கையால் அவர் எதிர்காலத்தில் வேறு ஏதேனும் புதிய AI நிறுவனத்தைத் தொடங்கினால், அதில் தாராளமாக முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக லியோ கொகுஆன் தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் மாற்றத்தால் என்விடியாவின் பங்குகள் சரிந்ததோடு, ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பிலும் ஒரே நாளில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், என்விடியாவிலிருந்து அவர் விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், ஜென்சன் ஹுவாங்கை தனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்துவது தனக்கு மிகப்பெரிய பெருமை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளால் உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் விலகியுள்ள இந்தச் சம்பவம், தற்போது பங்குச்சந்தை மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author