வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 8-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல நாளை, அக்டோபர் 4, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
