சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயாலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 16ஆம் நாள் குவாங்டொங் மாநிலத்தின் சோங்ஷான் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது கமிட்டியின் 5ஆவது முழு அமர்வின் எழுச்சியை ஆழமாகப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இம்முழு அமர்வு வழங்கிய பல்வேறு தீர்மானங்கள் உண்மையாகச் செயல்படுத்தி, கட்சியைக் கண்டிப்பான முறையில் தொடர்ந்து ஒழுங்கு அமைப்பதை பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டும். முத்து ஆற்றுக் கழிமுகப்பகுதியின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகள் ஒருங்கிணைப்பாக வளர்வதை முன்னேற்றி, குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்தின் தரமிக்க வளர்ச்சிக்கான புதிய நிலைமையை முழு முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஓர் ஆண்டின் இறுதி மற்றும் துவக்கத்தில் பல்வேறு பணிகளை பயனுள்ள முறையில் செவ்வனே செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கொள்கை மற்றும் நடவடிக்கைகளைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, முழு ஆண்டின் முக்கிய இலக்குகளை நடைமுறைப்படுத்தி, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்கத்தை சிறப்பாக நனவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
