உலக தலைவர்கள் முன்னிலையில் மிளிர்ந்த தேசப்பற்று…! வைரலாகும் வீடியோ…! 

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் மனிதாபிமானமும் தேசப்பற்றும் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைமையில் 49வது ஆசியான் உச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்ட அதிகாரப்பூர்வக் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தலைவர்கள் அனைவரும் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக இந்தியத் தேசியக் கொடியின் சிறிய வடிவிலான புகைப்படம் தரையில் கிடந்துள்ளது. உலகத் தலைவர்களின் கவனம் முழுவதும் கேமராக்கள் மீதும் உரையாடல்கள் மீதும் இருந்த அந்தச் சூழலில், பிரதமர் மோடியின் கண்கள் மட்டும் தரையில் கிடந்த தேசியக் கொடியின் மீது பட்டது.

தேசியக் கொடிக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கருத்தில் கொண்டு, எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் குனிந்து அந்தக் கொடியைத் தன் கைகளால் பத்திரமாக எடுத்தார் பிரதமர் மோடி. பின்னர், அதனைத் தனது பாக்கெட்டில் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டார். உலகத் தலைவர்கள் முன்னிலையில் தேசத்தின் கெளரவத்திற்கு அவர் கொடுத்த இந்த மாபெரும் மரியாதை அங்குள்ளவர்களையும், பின்னர் இந்த வீடியோவைக் கண்ட லட்சக்கணக்கான மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதற்கிடையே, இந்த உச்சி மாநாட்டில் தென்கடல் சீனா பகுதியில் நிலவிவரும் பதற்றமான சூழல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆழமாக ஆலோசிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author