உலகளாவிய உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு செப்டம்பர் மாதத்தில் சற்று குறைவு

Estimated read time 1 min read

சீனாவின் சரக்கு போக்கவரத்து மற்றும் கொள்முதல்கூட்டமைப்பு

கூட்டமைப்பு

(CFLP) திங்களன்று வெளியிட்ட தரவுகளின்படி, உலகளாவிய உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) செப்டம்பர் மாதத்தில் 49.7 சதவீதமாகப்
பதிவாகியுள்ளது
. இது முந்தைய மாதத்தை விட 0.2 சதவீத புள்ளிகள் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் காலாண்டிற்கான உலகளாவிய சராசரி
உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு
49.6 சதவீதமாக இருந்தது. இது இரண்டாவது
காலாண்டுடன் ஒப்பிடும்போது
0.3 சதவீத
புள்ளிகள் அதிகரித்துள்ளது
. இது மூன்றாம்
காலாண்டில் உற்பத்தித் துறையில் அடைந்துள்ள வலுவான மீட்சியைக் குறிக்கிறது
.

பிராந்திய ரீதியாக, ஆசிய உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு செப்டம்பர் மாதத்தில்
நிலையானதாக உள்ளது
. இது தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் வைத்திருந்தது. ஆப்பிரிக்காவில் இந்தக் குறியீடு ஒரு உயர்வைப் பதிவு செய்தது. மூன்று மாதங்களுக்கு 50 சதவீதத்திற்கு
மேல் இருந்தது
.

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த
வேண்டியதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்
. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உற்பத்தியின் நிலையான விரிவாக்கம்
பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதில் பிராந்திய வர்த்தக ஒத்துழைப்பின் முக்கிய பங்கை
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டது
.

Please follow and like us:

You May Also Like

More From Author