ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 தகுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்களுக்கு, போட்டிக்கு முன்பாக வயாக்ரா மருந்தைப் பயன்படுத்த ஒரு விசித்திரமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள தேசிய மைதானமான அஸ்டெகா கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,350 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த அசாத்திய உயரத்தால் வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான உடல் சோர்வு மற்றும் உயர நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மேலாளர் தாமஸ் துஹெல் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த வினோத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பையில் விசித்திரம்: மெக்சிகோ போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களுக்கு வயாக்ரா எடுத்துக்கொள்ள அனுமதி எதற்காக?
