அமெரிக்க உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 1ஆம் நாள், ஃபென்டானில் எனும் ஒரு வகை சிறப்பு மருந்தை காரணமாக கொண்டு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி வசூலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தவறான செயல், உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிகளுக்குப் புறம்பானது. மேலும் இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் இயல்பான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்குத் தீங்கு விளைவிப்பதோடு, அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு மேலதிகமான பாதிப்புகளைக் ஏற்படுத்தும். முன்பு அமெரிக்கா மேற்கொண்ட வர்த்தக போர், அமெரிக்க மக்களுக்கு நுகர்வு வரிச் சுமையை ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம் சீனா வழக்கு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், சொந்த, நியாயமான உரிமை நலன்களைப் பேணிக்காக்க சீனா தேவையான பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஃபெண்டானில், ஒரு செயற்கை ஓபியாய்டு வலி நிவாரணி. அமெரிக்காவில் போதைப்பொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்கச் சமூகத்தில் அளவுக்கு மீறிய தேவை, தொடர் லாபம் மற்றும் அமெரிக்க அரசின் வலிமையற்ற கண்காணிப்பு ஆற்றல் ஆகிய காரணங்களால் இந்த சூழ்நிலை ஏற்பட்டது. தற்போதைய அமெரிக்காவில் பாதிப்புக்கும் மேலான மாநிலங்களில் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் ஃபெண்டானில் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கருப்பு சந்தைகள் அதிகம். இதன்படி, ஃபெண்டானில் பிரச்சினை அமெரிக்காவுக்கான சொந்தமான பிரச்சினை தான். தவிரவும், 2019-ஆம் ஆண்டு, ஃபெண்டானில் கட்டுப்பாட்டுப் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக அளவில் இந்த நடவடிக்கையை சீனா முதல் முறையாக எடுத்துள்ளது. அமெரிக்க சுங்கவரி மற்றும் எல்லை பாதுகாப்பு வாரியம் உள்ளிட்டவை வெளியிட்ட செய்திகளின்படி, 2019ஆம் ஆண்டு முதல் இது வரை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபெண்டானில் அமெரிக்காவில் காணப்படவில்லை. இந்த பின்னணியில், ஃபெண்டானில் பிரச்சினை என்ற சாக்குப்போக்காகக் கொண்டு வேண்டுமென்றே பரப்புரை செய்வது என்பது அமெரிக்காவின் உள்நோக்கம் என்பதில் ஐயமில்லை.