வரும் 24ம் தேதி விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்..!

Estimated read time 1 min read

அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.

இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தற்போது செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதற்கு ஏவுதளத்தில் தயாராக இருக்கும் புகைப்படத்தை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 15, 21ம் தேதிகளில், ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author