சீனாவின் உள்நாட்டு வங்கிகளுக்கு இடையிலான கடன் பத்திரச் சந்தையில் 800 கோடி யுவான் மதிப்புள்ள பாண்டா கடன் பத்திரத்தை பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ளதாக 19ஆம் நாள் அறிவித்துள்ளது. இதனுடன், இவ்வங்கி வெளியிட்டுள்ள பாண்டா கடன் பத்திரத்தின் மொத்த மதிப்பு 10 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இவ்வங்கிக்கும், பாண்டா கடன் பத்திரச் சந்தைக்கும் ஒரு முக்கியமான மைல்கல் இதுவாகும்.
இது குறித்து பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவரும் தலைமை நிதி அதிகாரியுமான ஃபூ தாவ்பெங் கூறுகையில், உள்கட்டமைப்பு மற்றும் தொடரவல்ல திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில், பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி தொடர்ந்து போட்டித்தன்மையுடைய நிலைகளுடன் நிதி திரட்டுவதோடு, நிதி ஆதாரங்களை மேலும் பன்முகப்படுத்தி, முதலீட்டாளர் அடித்தளத்தை விரிவுபடுத்தும் என்றும் தெரிவித்தார்.
