ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர், நாசி ஜெர்மனிக்கு எதிரான பெரும் தேசபக்திப் போர் ஆகியை வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் நடத்தப்பட்ட சீன-ரஷிய மானிட பண்பாட்டியல் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், 80 ஆண்டுகளுக்கு முன்பு, பாசிசவாத எதிரான உலக மக்களின் போரின் வெற்றிக்குச் சீன மக்களும் ரஷிய மக்களும் மறக்க முடியாத வரலாற்று பங்களிப்பை ஆற்றியதை நினைவுகூர்ந்தார். மேலும், 80ஆண்டுகளுக்கு பிந்தைய இன்று, இரு தரப்பின் கூட்டு முயற்சியில், புதிய உயிராற்றல் படைத்த சீன-ரஷிய உறவு பெரிய நாடுகளின் உறவுகளில் புதிய ரக முன்மாதிரியாக திகழ்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாட்டு செய்தி ஊடங்கள் மேலதிக மானிட பண்பாட்டியல் பரிமாற்றங்களை நடத்தி இரு நாட்டு மக்களின் புரிந்துணர்வுக்கு மேலதிக உந்து ஆற்றலை வழங்க வேண்டும் என விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அன்று மாஸ்கோவில் நடைபெற்ற இப்பரிமாற்ற நிகழ்ச்சி சீன ஊடகக் குழுமம், ரஷிய தேசிய தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவற்றால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.