முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாயார் சாவித்ரி தேவி காலமானார்!

Estimated read time 0 min read

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி (91), வயது மூப்பு மற்றும் நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை காலமானார். உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் கிராமத்தில் இருக்கும் தனது பூர்வீக இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக முதலமைச்சரின் சகோதரர் மகேந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இல்லத்தரசியான சாவித்ரி தேவி, தனது குடும்பத்தினருடன் பஞ்சூர் கிராமத்திலேயே வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை பலமுறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று நலம் விசாரித்திருந்தார்.

தாயாரின் மறைவுச் செய்தி கிடைத்த நேரத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author