33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் சாதனைகள்

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நவம்பர் 19ம் நாள் 33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் சாதனைகளை அறிமுகம் செய்தார்.

அவர் கூறுகையில், கடந்த ஓராண்டில் சீனா உபசரிப்பு நாட்டுக்கே உரிய கடப்பாட்டை நிறைவேற்றி, ஏபெக் தொடர்பான 321 கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி, ஏபெக் ஒத்துழைப்புக்கு புதிய உயிராற்றல் மற்றும் வலுவான சக்தியை ஊட்டியுள்ளது என்றார். மேலும், பல்வேறு துறை அமைச்சர்கள் கூட்டங்களில் 10க்கும் மேலான முக்கியச் சாதனைகள் எட்டப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர் அண்மையில் நடைபெற்ற 33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம், இவ்வாண்டு சீனா ஏற்பாடு செய்த மிக முக்கியமான தூதாண்மை நிகழ்வாகும் என்பதைச் சுட்டிக் காட்டினார். ஏபெக் ஒத்துழைப்பின் புதிய நிலைமையை திறந்து வைப்பதற்கும் மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் அது ஆழ்ந்த பங்கு ஆற்றும் என்றும் அவர்  தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில், பல்வேறு பொருளாதாரத் தலைவர்களின் ஆதரவுடன், ஏபெக் பொருளாதாரத் தலைவர்களின் ஷென்சென் முன்னாய்வு என்ற ஆவணம் எட்டப்பட்டது. இக்கூட்டத்தின் மிக முக்கிய சாதனையாகவும், ஏபெக் ஒத்துழைப்பின் புதிய மைல் கல்லாகவும் இது திகழ்கிறது.

சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்து, வாங்யீ கூறுகையில், உலகின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிதானம் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். நேர்மையான மற்றும் நட்பார்ந்த சூழ்நிலையில் நடைபெற்ற இச்சந்திப்பில் தொகுதியான ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டதோடு, அமைதி அறிக்கையும் உலகிற்கு வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத்தை, அமைதி உச்சிமாநாடு என்று அழைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author