ஷிச்சின்பிங்கின் உரைக்கு சர்வதேச அளவில் பெரும் பாராட்டு

Estimated read time 1 min read

33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரை, அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொதுச் சமூகத்தை கூட்டாக உருவாக்குவதற்கும், இப்பிரதேசத்தின் கூட்டுச் செழுமையை மேம்படுத்துவதற்கும், முக்கியமான வழிகாட்டலை வழங்கியுள்ளது என்றும், ஒருமித்த கருத்தை உருவாக்குதல், அனைத்து தரப்புகளுடனும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கூட்டு வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் சீனா கொண்டுள்ள பொறுப்புணர்வை இது காட்டுகிறது என்றும், சர்வதேச பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், திறப்பு, புத்தாக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஷிச்சின்பிங் வலியுறுத்தியதை, அவர்கள் பெரிதும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனாவின் முன்மொழிவுகளும் தீர்வுகளும், ஆசிய-பசிபிக் பிரதேச மற்றும் உலக வளர்ச்சிக்கு புதிய வலுவான ஆற்றலை வழங்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author