சீனா எதிர்வரும் 5 ஆண்டுகளில், மேலதிகமான அளவில் நுகர்வுக்கு ஆதரவளித்து, வேறுபட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, நுகர்வு சந்தையின் உள்ளார்ந்த ஆற்றலை மேலும் விரிவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நுகர்வுப் பொருட்களின் வினியோகம் மற்றும் தேவைக்கு ஏற்ப நுகர்வை மேலும் விரைவுபடுத்தும் நடைமுறையாக்க திட்டம் அண்மையில் வெளியிடப்பட்ட பின், வெளிநாட்டு செய்திஊடகங்கள் இது குறித்து மேற்கூறிய கருத்துக்களை வெளியிட்டன.
2027ஆம் ஆண்டுக்குள், இலட்சம் கோடி யுவான் மதிப்பு வாய்ந்த 3 நுகர்வு துறைகளும், 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 முன்னிலையான நுகர்வு துறைகளும் உருவாக்கப்பட வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள், வினியோகம் மற்றும் நுகர்வு இடையில் ஆக்கப்பூர்வமான தொடர்பை அமைத்து, ஒன்றை ஒன்றை விரைவுபடுத்தும் உயர் தர வளர்ச்சி நிலைமை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதார அதிகரிப்புக்கான நுகர்வின் பங்கு விகிதம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்ற 2 காலக்கட்டத்திலுள்ள முக்கிய வளர்ச்சி இலக்குகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன. தவிரவும், 5 துறைகளின் 19 முக்கிய கடமைகள் இதில் ஏற்பாடு செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக, முதியோருக்கு சேவை வழங்கும் ரோபாக்கள், முதியோருக்கு சொகுசான காலணிகள் போன்ற பொருட்களின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பை வலுப்படுத்தி, இளைஞர்களுக்கு மேலாதிகமான சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த ஆடைகளைத் தயாரிப்பதை ஆதரிக்க வேண்டும் என்பது இதில் அடக்கம்.
சீனா முன்வைத்த இந்த புதிய நுகர்வு இலக்குகள், உலகத்திற்கு நன்மை பயக்கும். தற்போது, சீனாவில் நுகர்வுப் பொருட்கள் வகைகளின் எண்ணிக்கை 23 கோடியை எட்டியுள்ளது. வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள், வீட்டு சாமான்கள், பண்பாடு மற்றும் விளையாட்டு பொருட்கள், ஆடைகள் போன்ற 100க்கும் மேலான வகைகளின் பொருட்களின் உற்பத்தி அளவு உலகில் முதலிடத்தில் வகிக்கின்றது.
இத்திட்டத்தின் மூலம், சீனாவில் மிகப் பெரிய அளவு வாய்ந்த சந்தையின் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்கி, உலகத்திற்கு மேலதிகமான கூட்டு வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்பது ஐயமில்லை.
