சீனாவில் மல்லாக்க கிடந்த ஆமையை காப்பாற்றிய சக ஆமை!!! 

Estimated read time 1 min read

சீனாவின் அமைந்துள்ள ‘நான்ஜிங் ஹாங்ஷான் பாரஸ்ட்’ மிருகக்காட்சி சாலையில், மல்லாக்கக் கிடந்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் பரிதவித்த ஆமை ஒன்றை, சக ஆமை போராடிக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆமை ஒன்று எதிர்பாராத விதமாகத் தரையில் மல்லாக்கக் விழுந்து எழுந்து நிற்க முடியாமல் தவித்துள்ளது.

காயம் காரணமாக மீண்டும் நிமிர்ந்து நிற்க முடியாமல், தனது கால்களை மேல்நோக்கி ஆட்டியபடி அந்த ஆமை நீண்ட நேரமாகப் போராடிக் கொண்டிருந்தது. இதனைத் தூரத்திலிருந்து கவனித்த மற்றொரு சக ஆமை, மெதுவாக அதை நோக்கி நகர்ந்து வந்தது. இயல்பாகவே மெதுவாகச் செல்லும் தன்மையுடைய ஆமையானது, தன் சக நண்பனைக் காப்பாற்றுவதற்காகப் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கியது.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மல்லாக்கக் கிடந்த ஆமையை மீண்டும் அதன் கால்களில் நிற்க வைப்பதற்காகத் தனது முழு பலத்தையும் திரட்டி, தலையால் முட்டிப் புரட்டிப் போட்டது. சக ஆமையின் இந்த முயற்சியால் மல்லாக்கக் கிடந்த ஆமை மீண்டும் பழையபடி நிமிர்ந்து நின்றது. இதைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author