ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதில் இருந்து அமெரிக்கா விலகியது.
அதனையடுத்து, அமெரிக்காவின் இந்த செயலால் இஸ்ரேல் கோபடமடைந்தது.
போர் தொடங்கியதில் இருந்து நட்பு நாடுகளாக செயல்பட்டு வரும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த பெரும் மோதலால், இஸ்ரேலிய உயர்மட்டக் குழுவின் வாஷிங்டன் பயணத்தை இஸ்ரேல் ரத்து செய்தது.
ஹமாஸ் கைதிகளை விடுவிப்பதற்கான போர்நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பை நடப்பதற்கு அமெரிக்கா அனுமதித்ததால் “கொள்கை நிலையிலிருந்து” அமெரிக்கா “பின்வாங்குகிறது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
