இயல்பியல், கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் துறையில் புத்தாக்க முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு வழங்கியதைப் பாராட்டி, சீன அறிவியலாளர் வாங் சியௌயுன் உள்ளிட்ட 5மகளிருக்கு 2025ஆம் ஆண்டுக்கான உலக சிறந்த பெண் அறிவியலாளர் என்ற விருது வழங்கப்படுள்ளதாக ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பு 26ஆம் நாள் அறிவித்துள்ளது.
சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாங் சியௌயுன் குறியாக்கவியல் மற்றும் கணிதவியல் துறையில் முக்கிய ஆய்வுச் சாதனைகளைப் பெற்று பாதுகாப்பான தரவுத் தொடர்பு மற்றும் சேமிப்புக்கு உறுதியான உத்தரவாதம் அளித்துள்ளார் என்று யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஞ்சிய 4 பெண் அறிவியலாளர்கள் முறையே தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, அர்ஜென்டினா மற்றும அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.