சீன ஊடகக் குழுமமும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான சீன தூதரகமும் கூட்டாக நடத்திய அமைதியின் எதிரொலி என்ற பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கை அபுதாபி நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில்,
வரலாற்றின் நினைவு மற்றும் உண்மை, காலத்தால் மங்கிவிடாது. வரலாறு ஏற்படுத்திய ஞானம், எதிர்காலத்தை வெளிப்படுத்தும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும்.
சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து, செய்தி வெளியீடு, தகவல் பரிமாற்றம், மூலவளங்கள் பகிர்வு ஆகியவற்றுக்கான மேடைகளை உருவாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புகின்றது என்றார்.
