2025ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் புதின் ஆகிய இருவரும், ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில்,
2025ஆம் ஆண்டு, புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு வலிமையான வளர்ச்சி பாதையில் நுழைந்துள்ளது. 2026-2027 ஆண்டுகளில், இரு தரப்பும் சீன-ரஷிய கல்வி ஆண்டு எனும் நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. ரஷிய அரசு தலைவர் புதினுடன் தொடர்ந்து நெருக்கமாக தொடர்பு மேற்கொள்ள விரும்புகின்றேன். புதிய யுகத்தில் சீன-ரஷிய உறவு தொடர்ந்து புதிய சாதனைகளை உருவாக்க இரு தரப்பும் கூட்டாக தலைமை தாங்குவோம் என்றார்.
புதின் இதில் கூறுகையில்,
2025ஆம் ஆண்டில், புதிய யுகத்தில் ரஷிய-சீன பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் சேர்ந்து, இரு தரப்புறவு மற்றும் முக்கிய சர்வதேச பிரச்சினைகள் குறித்து நெருக்கமாக தொடர்பு மேற்கொள்வேன் என்றார்.
இதே நாளில், சீன தலைமையமைச்சர் லீச்சியாங்கும், ரஷிய தலைமையமைச்சர் மிஷுஸ்டினும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
