14வது சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா பிப்ரவரி 27ம் நாளிரவு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுலுன்பேர் நகரில் நடைபெற்றது.
முழு நாட்டைச் சேர்ந்த 35 பிரதிநிதிக் குழுகளின் சுமார் 3 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் சவால்களை எதிர்கொண்டு பங்கெடுத்த இவ்விளையாட்டுப் போட்டியில், மொத்தம் 99 தங்கப் பதக்கங்கள் அளிக்கப்பட்டன.
26 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றன. 30 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களைப் பெற்றன.
அடுத்த சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டி 2028ம் ஆண்டில் லியாவ் நிங் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.