இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Estimated read time 0 min read

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருவதாகவும்,

தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் சுமார் 40% பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்துவரும் போதிலும், குடியுரிமை தற்போது வரை கிடைக்கவில்லை என்றும். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற சட்டப்பூர்வ தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட நிரந்தர தீர்வு தேவை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

You May Also Like

More From Author