ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற தொடங்கியபோது 70க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 81-வது பொதுச்சபை அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்றுவதற்காக சென்றார். அப்போது அவர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 70க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைக் கண்டு ஆவேசமடைந்த நெதன்யாகு, அரங்கில் இருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் கோழைகள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து இப்போதே வெளியேறுங்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய நெதன்யாகு, வெளிநடப்பு செய்த பிரதிநிதிகளின் நாடுகள் சில, தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டார். ஈரான் அணு ஆயுத தளங்களை அழிப்பது கடினமானது எனவும் ஆனால் அதைச் செய்யாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் உயிரிழந்திருப்போம் எனவும் நெதன்யாகு குறிப்பிட்டார்.
