கலப்பட பால் குடித்து ஆந்திராவில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரியில் உள்ள லாலா செருவு சவுடேஷ்வரிநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலர் பிப்ரவரி 15 முதல் வாந்தி, சிறுநீர் கழிக்க இயலாமை, வயிறு உப்புசம் மற்றும் பிற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் 14 பேர் நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கலப்பட பால் குடித்ததே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
L அவர்களில் கிருஷ்ணவேணி (75) ராதாகிருஷ்ணா (70) சேஷகிரி ராவ் (72) மற்றும் ரமணி ஆகியோர் அனுரியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி யிரிழந்துள்ளனர். மேலும் நகரில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள 274 பேரின் இரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். குறிப்பாக இதற்கு காரணமான நரசாபுரம் சேர்ந்த பால் வியாபாரி நாகேஸ்வர ராவ் 42 பேரிடம் பால் சேகரித்து 164 குடும்பத்திற்கு பால் விநியோகம் செய்து வந்ததால் அந்த பகுதியில் உள்ள பால் வியாபாரிகளிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து ஐதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் பேசுகையில், “கலப்பட பால் சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் இறந்த நிலையில், இரண்டு பேர் வென்டிலேட்டரிம் மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த கிருஷ்ணவேணி, ராதாகிருஷ்ணா, சேஷகிரி ராவ் மற்றும் ரமணி ஆகியோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதோடு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு முழு சிகிச்சைக்காம செலவு அரசே ஏற்கும் என்றார்.
மேலும் இதற்கு காரணம் கலப்பட பால் தான் காரணம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு இறந்த கிருஷ்ணவேணி மகன் அளித்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து பால் விநியோகம் செய்து நாகேஸ்வர ராவ் என்பவரை கைது செய்துள்ளனர். கலப்பட பாலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
