உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) அதிகாலை ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு குறைந்தது 22 ட்ரோன்களை ஏவியது.
இதையடுத்து மாசுகோவின் இரண்டு விமான நிலையங்களை ரஷ்யா அரசு தற்காலிகமாக மூடியது.
மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்கள் மற்றும் டோமோடெடோவோ நகரில் 12 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
“முதற்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகள் விழுந்த இடத்தில் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை” என்று சோபியானின் டெலிகிராமில் கூறினார்.
ரஷ்யாவின் ஃபெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சியான ரோசாவியாட்சியா டெலிகிராமில், “சிவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டோமோடெடோவோ மற்றும் ஜுகோவோ விமான நிலையங்களின் செயல்பாட்டில் தற்காலிக கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.” எனக் கூறினார்.